Home செய்திகள் மதுரையில் பார்வையற்றோருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவி .

மதுரையில் பார்வையற்றோருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண உதவி .

by mohan

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்.கே தேவேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பில் அறங்காவலர்கள் திருமதி ரத்னமாலா ராஜேஷ்குமார் திருமதி கலைச்செல்வி தேவேந்திரன் மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் தற்போதுகொரோனா நோய் தொற்று எதிரொலியால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.அதன்படி இன்று மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் உள்ள காமராஜ் நலன்புரி குழுவில் உள்ள பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உள்ள 80 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கினர்.மேலும் மதுரை வடபழஞ்சியில் உள்ள மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கினர்.இதேபோன்று கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com