Home செய்திகள் சிலைமான் அருகில் உள்ள சக்குடி ஸ்ரீமுப்புலி சாமி கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.

சிலைமான் அருகில் உள்ள சக்குடி ஸ்ரீமுப்புலி சாமி கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.

by mohan

பிரபலமான ஜல்லிக்கட்டு காளைகள் உள்பட 1100 காளைகளும் சிறந்த மாடுபிடி வீரர்கள் உள்பட 800 பேரும் போட்டியில் பங்கேற்றனர்.போட்டியினைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 2000-க்கும் மேற்ப்பட்டோர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.மதுரை மாவட்டம், கிழக்கு தாலுகாவில் சக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுப்புலிசாமி கோயில் மகா சிவாராத்திரி பண்டிகையை முன்னிட்டு, வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கடந்த ஆன்டில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டதால், நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது , கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்துள்ளது, அதன் படி இன்று சக்குடியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஏற்பாட்டின்பேரில், நடைபெற்று வருகின்றது. போட்டியில் 1100 காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க்க பல் வேறு மாவட்டங்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு காளைகளும் வீரர்களும் பங்கேற்று உள்ளனர் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் சைக்கிள் / அண்டா / டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் ரு1000 முதல் ரூ 1 லட்சம் வரை ரொக்கப் பணம் வழங்கினர். போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதிக காயங்கள் ஏற்பட்டவர்களை மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் போட்டிற்க்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ,இப் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த விலங்குகள் நலவாரிய தலைவர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஜல்லிக்கட்டுப் போட்டியினை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் ,காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!