Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சிவில் சர்வீஸில் வேலைவாய்ப்பு நோக்குநிலை திட்ட கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சிவில் சர்வீஸில் வேலைவாய்ப்பு நோக்குநிலை திட்ட கருத்தரங்கம்.

by mohan

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் சார்பில் சிவில் சர்வீஸில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் நோக்குநிலை திட்டம் 12.3.2022 சனிக்கிழமை அன்று மதியம் இரண்டு மணிக்கு துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிளை கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் திரு.எஸ்.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வினை எதிர்கொள்வதற்கு தேவையான உதவி குறிப்புகளையும், அத்தேர்வில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர். A.R.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் Er.பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் பேசுகையில் இடைவிடாத, மனம் தளராத முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற கருத்தினை மாணவர்களுக்கு வலியுறுத்தினார். இவ்விழாவின் துவக்கமாக வரவேற்புரையை வேலைவாய்ப்பு பிரிவின் இணை டீன் முனைவர். A.கஸ்தூரி அவர்கள் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி S.ஜெகதீசன் அவர்கள் நன்றியுரை கூறினார். வேதியியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் V. சீதாராமன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இப்பயிற்சியில் 200க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com