Home செய்திகள் மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு மேலும் 2 காலி ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகிறது.

மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ராஞ்சிக்கு மேலும் 2 காலி ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு செல்லப்படுகிறது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சியில் உள்ள பெல் இரும்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நி காலி ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்ட டேங்கர் லாரிகள் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரானா தொற்று இரண்டாவது அலை காரணமாக நோயாளிகள் சுவாசிக்க தேவையான பிராண வாய்வு ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.இதனைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க திருச்சியில் அமைந்துள்ள இரும்பு தொழிற்சாலையான பெல் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட 16,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 காலி ஆக்ஸிஸன் டேங்கர்கள் திருச்சியில் இருந்து லாரி மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அவை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் மூலம் மதுரையில் இருந்து மதியம் 12.00 மணியளவில்3 டேங்கர் லாரிகளும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பப்பட உள்ளது,இன்று இரவு 9 மணியளவில் மேலும் 2 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் விமானப் படை விமானம் மூலம் கொண்டு செல்லப் பட்டதுமுன்னதாக கடந்த 14 ஆம் தேதியன்று இரவு 10.00 மணிக்கு மேல் 2 டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை மதுரை விமான நிலையத்திலிருந்து 7 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் விமானப்படை விமானம் மூலம் ராஞ்சி கொண்டு செல்லப்பட்டதுராஞ்சியில் ஆக்ஸிஜன் நிரப்பபட்ட லாரிகள் ரயில் மூலம் தமிழகம் கொண்டு வரப்படும் என தெரிவித்தனா.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com