Home செய்திகள் இராஜபாளையத்தில் போதிய விலை இல்லாமல் மா விவசாயிகள் வேதனை .

இராஜபாளையத்தில் போதிய விலை இல்லாமல் மா விவசாயிகள் வேதனை .

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அதிகளவில் மா விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான இராஜபாளையம் பகுதியில் அய்யனார் கோவில் ராக்காச்சி அம்மன் கோவில் செண்பகத்தோப்பு . வத்திராயிருப்பு .கன்சாபுரம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மா விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் மா விளைச்சல் அதிக அளவில் இருக்கும் கடந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது விலையும் அதிகமாக இருந்தது இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருக்கிறது ஆனால் விலை இல்லை என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.குறிப்பாக தற்போது கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயிகள் மாங்காய்களை பறித்து கொண்டு வந்து மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யும் பொழுது மொத்த விற்பனை நிலையத்தில் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய் வரை போகக்கூடிய சப்பட்டை பஞ்சவர்ணம் உள்ளிட்ட மாங்காய்களை 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே ஏலம் எடுப்பதால் போதிய விலை இல்லாமல் விவசாயிகள் வேதனை பட்டு வருகின்றனர் .ஆகையால் தமிழக அரசு மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யவும் கிராமப்பகுதியில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்என தமிழக விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் மாங்காய்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லக்கூடிய மாங்காய் வண்டி செல்வதற்கு இ பாஸ் வழங்க முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com