Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் ரூ.97.44 கோடியில் புதிய ஏ.டி.சி.டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்) அமைக்க டெண்டர் நடைமுறைகள் துவங்கியுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் ரூ.97.44 கோடியில் புதிய ஏ.டி.சி.டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்) அமைக்க டெண்டர் நடைமுறைகள் துவங்கியுள்ளன.

by mohan

மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளுக்கான ரூ.145 கோடியில் டெர்மினல் கட்டப்பட்டு 2011ல் பயன்பாட்டிற்கு வந்தது.உள் கட்டமைப்புகள் இருந்தும் சர்வதேச விமானங்களை இயங்குவது தள்ளிபோகிறது.தற்போதுள்ள விமான ஓடுபாதை 7500 அடியை முதற்கட்டமாக 10 ஆயிரம் அடியாக நீடிக்க தேசிய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்நிலையில் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் பழுது நீக்கல், பராமரிப்பு மையம் அமைக்க ஆணையம் டெண்டர் நடைமுறைகளை துவக்கியுள்ளது.ரூ.97.44 கோடியில் இப்பணிகளை 24 மாதங்களில் முடிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது.மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறியதாவது: மதுரையில் கையாளப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தற்போது கொரோனா ஊரடங்கால் சில நிறுவனங்கள் தங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.தற்போதுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை விட புதிய கோபுரம் உயரமானதாக அமையும். இங்கிருந்து 360 டிகிரி கோணத்தில் வானில் விமானங்களை கண்காணிக்க முடியும்.விமானஓட்டிகளுக்கு நவீன முறையில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய பழுது நீக்கும் மையமும் கோபுர கீழ்தளத்தில் அமைகிறது என்றார்.இதன் மூலம்விரைவானதகவல் தொழில் நுட்ப வசதி, அடிப்படை கட்டமைப்பு, விமான நிலைய வளாகம் தவிர தகவல் தொழில் நுட்ப சேவை விரைவான முறையில் பரிமாற்றும் வசதியுடன் அமையம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com