Home செய்திகள் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி போட சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காத்திருக்கும் பொதுமக்கள்.

இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி போட சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காத்திருக்கும் பொதுமக்கள்.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதுமுதல் தடவை தடுப்பூசி போடுவார்கள் காலை முதல் காத்திருந்து ஊசிக் போட்டு கொண்டனர் . இரண்டாவது முறையாக தடுப்பூசி போடுவதற்காக 150க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது இவர்களுக்கு டோக்கன் வழங்கி சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்காமல் மொத்தமாக நிற்ப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது .மேலும் மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இரண்டு பேரும் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் அவ்வப்போது வெளியில் காத்திருக்கும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி நில்லுங்கள் மாஸ்க் அணிந்தால் மட்டுமே மருந்து தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவுறுத்தினாலும் அதையும் அலட்சியப்படுத்தி பொதுமக்கள் மொத்தமாக கூட்டமாக நிற்பதால் நோய்த் தொற்று அதிகரிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது .இன்று ஒரு நாள் மட்டும் 150 க்கும் மேற்பட்டோர் கூடி தடுப்பூசி போடுவதற்காக வந்தனர் ஆனால் 80 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு மீதமுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!