Home செய்திகள் பாலமேடு அருகே இடி, மின்னலுடன் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மரம் சாய்ந்து விழுந்து விவசாயி மற்றும் இரு பசுமாடுகள் உயிரிழப்பு.

பாலமேடு அருகே இடி, மின்னலுடன் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மரம் சாய்ந்து விழுந்து விவசாயி மற்றும் இரு பசுமாடுகள் உயிரிழப்பு.

by mohan

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவுநேரம் இடி, மின்னுடலுடன் கனத்த மழை பெய்ததுஇதில் மதுரை பாலமேடு அருகே உள்ள ஏரம்பட்டி பகுதியில் வீசிய பலத்த சுறாவளி காற்றால் புளியமரம் வேரோடு சாய்ந்து விவசாய கூலி வேலை செய்துவரும் பழனியாண்டி (55) என்பவர் மாட்டு தொழுவத்தின் மீது விழுந்ததுமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி விவசாயி பழனியாண்டி மற்றும் அவரது இரு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததுசம்பவம் அறிந்த கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றி இடிபாடுகளில் சிக்கிய பழனியாண்டியின் உடலை மீட்டனர்பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்விபத்து குறித்து பாலமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்மழையால் மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி மற்றும் அவரது இரு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!