Home செய்திகள் மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் கொரோனா பேரிடருக்கு நிவாரணம் வேண்டி அமைதிப் பேரணி.

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் கொரோனா பேரிடருக்கு நிவாரணம் வேண்டி அமைதிப் பேரணி.

by mohan

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்புமேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 60க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக வந்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில்தமிழகத்தில் மெல்லிசை மற்றும் தொழில்நுட்பத்தை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் அவர்களது குடும்பமும் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் மட்டுமே கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்கள் நடைபெறும் இந்த நான்கு மாத வருமானம் மட்டுமே கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த வருடத்தின் வாழ்வாதாரமாக இருக்கிறது.இந்த காலகட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு இரண்டு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வந்து விடுகிறது. ஆகவே இந்த 4 மாத கால கட்டத்தில்தான் தேர்தல் விதிமுறைகளின் படி எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படுகிறது.மேலும் பேரிடர் காலங்களில் திருமண மண்டபங்களில் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடு இருப்பதால் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் மறுக்கப்படுகிறது. ஆகவே இசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தடைக்காலம் ஏற்படும் போது ஒவ்வொரு கலைஞர் குடும்பத்துக்கும் பேரிடர் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும்,மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்களாக ஆக்கிட.வேண்டும் என்றும், மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனி நலவாரியம் அமைத்து ஆவண செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com