லாரி பைக் மோதல். ஒருவர் பலி

திருப்பரங்குன்றம் அருகே சீனிவாசா காலனி நான்கு வழிச்சாலையில் யில் லாரி பைக் மோதல் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இவ் விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.நேற்று மாலை 7 மணி அளவில்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சீனிவாசா காலனி அருகில் நான்கு வழிச்சாலையை லிருந்து நாகமலை புதுக்கோட்டை நோக்கி செல்ல முயன்ற லாரியின் பின்புறம் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார்..மற்றொருவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து முதல் கட்ட விசாரணையில் வாடிப்பட்டி தாலுகா பட்டியை சேர்ந்த அழகுமலை மகன் அழகுராஜா (வயது 40) என்றும் இவரது நண்பர் பெயர் விவரம் தெரியாததால் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்