சத்திரப்பட்டியில் மனிதநேய வார விழா

மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் மனித நேய வார விழா மற்றும் நல்லிணக்க கூட்டம் மாவட்ட எஸ்.பி. சுஜீத் குமார் தலைமையில் நடந்தது.மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நடத்தும் மனிதநேய வார விழா மற்றும் நல்லிணக்க கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்திரப்பட்டியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மாணவ மாணவிகளுடன் உரையாற்றினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா,முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் , ஊமச்சிகுளம் டிஎஸ்பி விஜயகுமார், ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளர் உமா தேவி, மற்றும் சார்பு ஆய்வாளர் கிருஷ்ண பாண்டி ,ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்