மின் மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசின் உயிரிழப்பு தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து இராஜபாளையம் பகுதியில் மிக பெரிய பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வாறுகால் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய உப்புத்தண்ணீர் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது பல மோட்டார்கள் பழுதாகி இருப்பதால் மோட்டார்களை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் வெளி ஊரில் இருந்து எலக்ட்ரீசியன் அழைத்துவந்து மோட்டார்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் இன்று தெற்கு .வெங்காநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள மின்மோட்டார் பழுதாகி உள்ளது அதை பழுது பார்ப்பதற்காக மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஈஸ்வரன் (வயது 45 மனைவி பேச்சியம்மாள் இவருக்கு ஒரு பையன் ஒரு பெண் குழந்தை உள்ளது)என்பவரை அழைத்து வந்து பழுது பார்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஈஸ்வரன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.மேலும் உயிரிழந்த ஈஸ்வரனுக்கு உரிய நிவாரண உதவி ஊராட்சி மன்றம் சார்பில் வழங்க வேண்டும் அல்லது அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செய்தியாளர் வி காளமேகம்