
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நிலையூர் கிராமத்தில் ஹர்சினி மருத்துவமனை நிறுவனர் ரஜினிகாந்த் ஆலோசனையின்படி ஹர்ஷினி மருத்துவமனை மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் சார்பாக நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நிலையூர் கிராம நிர்வாக அதிகாரி கந்தவேல் தலைமையில்நடைபெற்றது.இம்மருத்துவ முகாமில் நிலையூர் கைத்தறி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் முதியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இம்மருத்துவ முகாமில் காது கேளாதோர் க்கு காது கேட்கும் திறன் கருவி கண் குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டன.இம்மருத்துவ முகாமில் ஹர்ஷினி மருத்துவமனை மருத்துவர் ஆனந்த் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகன், ஐடிஎப்சி பஸ்ட் பாரத் அலுவலர்கள் சதீஷ் அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.