
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் அடையாளம் தெரியாத சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மூதாட்டி இருப்பதை கவனித்த பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் அவரிடம் விசாரித்துள்ளார் தன்னை பற்றி தெரியாத நிலையில் இருந்த 70 வயது மூதாட்டியை ஊராட்சி மன்றதலைவர் ராமநாதன் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் இதையடுத்து செங்கம் அனைத்து மகளீர் காவல் நிலையம் ஆய்வாளர் கோமதி காவல் துறை வாட்ஸ்அப் குழுவில் அவரது புகைப்படம் பகிரப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் மூதாட்டி மகன் குமார் என்பவருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் செங்கம் காவல்நிலையதில் தொடர்பு கொண்டு பேசிய போது மூதாட்டி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா வெல்லூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதனனின் மனைவி லட்சுமி – 70 என தெரியவந்தது. அவர் இரண்டு நாட்களாக காணவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதியிடம் மூதாட்டி லட்சுமி தனது தாயர் என ஆதாரங்கள் கொடுத்து, குமார் விரைந்து வந்து மூதாட்டியை அழைத்துச் சென்றார் இத்தகைய முயற்சியை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் கோமதி அவர்களுக்கும் உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூதாட்டி லட்சுமி மகனுடன் செல்லும் போது நன்றியை தெரிவிக்கும் வகையில் குழந்தையை போல் காவல் ஆய்வாளர் கோமதியிடம் சிரித்து பேசியது அனைவரையும் நெகிழ செய்தது. அப்போது மகளிர் காவல் தலைமை எழுத்தர் குமுதா,மற்றும் பெண் காவலர்கள் உடனிரூந்தனர்
You must be logged in to post a comment.