
கிருஷ்ணகிரி மாவட்டம்: ஓசூரில் நபிகள் நாயகத்தினை அவதூராக பேசிய பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவரின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் சார்பில் நபிகள் நாயகத்தினை அவதூராக பேசிய பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவரின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேட்டுப்பாளையத்தி;ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் நபிகள் நாயகத்தினை கொச்சையாக பேசியுள்ளார் என்றும் மேலும் தொடந்து இஸ்லாமிய சமூகத்தினை ரையும்,குறானையும் தொடந்து இந்த நபர் இழிவாக பேசி வருவதாகவும் குற்றம் சாட்டி அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் இணைந்து கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பியும்,அவரது பேச்சினை கண்டித்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கல்யாணராமன் கொடும்பாவியை எரிக்க முயன்றனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொடும்பாவியை நீர் ஊற்றி அணைத்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் அதன் தோழமை அமைப்புகள் என 500க்கும் மேற்பட்ட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்
You must be logged in to post a comment.