முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை தெய்வானையை கடந்த வருடம் மே மாதம் திடீரென ஆவேசமடைந்து பாகன் காளிதாசை தும்பிக்கையால் தாக்கி சுவற்றில் அடித்து கொன்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவில் யானை பலமுறை மதம் பிடித்ததால் பக்தர்கள் பதட்டம் அடைந்தனர்.இதையடுத்து கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சரவணன் தலைமையில் கால்நடை டாக்டர்கள், யானையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.அதன்பின்னர் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதனைத் தொடர்ந்து யானையை பிற கோவிலை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வந்தனர்.மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானையை திருச்சிஎம் ஆர் பாளையம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.கடந்த 8மாதங்களாக புத்துணர்வு அளிக்கப்பட்ட யானை தெய்வயானை இன்று மதுரை கொண்டு வரப்பட்டது.இன்று காலை திரும்பிய யானை தனியாக இருப்பது மணநலத்தை பாதிக்கும் என்பதால் திருப்பரங்குன்றம் கொண்டு செல்லாமல் மீனாட்சி கோயிலில் கோயில் யானை யானைபார்வதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.யானைகள் முகாம் தொடங்கும் வரை தெய்வானை பார்வதியுடன் இருக்கும் தகவல் தெரிவித்தனர்.தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதியுடன் தெய்வயானை குதுகலமாக உள்ளது. (படம் கோப்புக்காட்சி)
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.