Home செய்திகள் மதுரையில் சிறுமி விழுங்கிய இரும்பு ஆணியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யாமல் எடுத்து சாதனை.

மதுரையில் சிறுமி விழுங்கிய இரும்பு ஆணியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யாமல் எடுத்து சாதனை.

by mohan

மதுரை செக்கானூரணியை சேர்ந்த 4 வயது சிறுமி அனுஷ்கா.இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக இரும்பு ஆணியை விழுங்கிவிட்டால்.இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியை மதுரை தத்தநேரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் வயிற்றுப் பகுதியில் ஆபத்தான இடத்தில் இரும்பு ஆணி இருப்பதை கண்டறிந்தனர்.இதையடுத்து மருத்துவ குழுவினர் உடனடியாக சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு எண்டாஸ்கோப்பி மூலம் நான்கு மணிநேர போராட்டத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் லாவகமாக ஆணியை வெளியே எடுத்து சாதனை புரிந்தனர்.இதில் எந்தவித ஆபரேஷன் இல்லாமல் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர்கள் மூலம் லாவகமாக இரும்பு ஆணியை அகற்றினர்.இதில் ஆணி வயிற்றுப் பகுதியிலோ குடல் பகுதியையோ கிழித்து விட்டால் சீழ் பிடித்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.சிகிச்சைக்கு பிறகு சிறுமி இப்போது முழு ஆரோக்கியத்துடன் இயல்பாகவும் இருப்பதாக பெற்றோர்கள் கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com