நாகமலை புதுக்கோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் வந்த இருவர் பலி .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே மதுரையிலிருந்து செக்கானூரணி நோக்கி சென்று கொண்டிருந்த டூவீலரில் செக்கானூரணி ஊத்துப்பட்டியை டியை சேர்ந்த சின்ன கண்ணு மகன் கோபு (வயசது 48) இதேபோல் ஊத்துப் பட்டடியை சேர்ந்த சுப்பிரமணி மகன் புண்ணியமூர்த்தி (வயது 50) இருவரும் டைல்ஸ் வேலை செய்து செய்துவருகின்றனர். இன்று மாலை ஆறரை மணியளவில் டூவீலரில் மதுரையிலிருந்து செக்கானூரணி நோக்கி செல்லும்போது நாகமலை புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.அவர்கள் ஓட்டி வந்த டூவீலர் தீப்பிடித்து எரிந்தது.இது குறித்து நாக மலைப் புதுக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இதுதொடர்பாக தனியார் பேருந்து மற்றும் மின்சார வாரியத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் இடம் விசாரணை செய்து வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்