மதுரை அண்ணாநகர் மேலமடை மருதுபாண்டியர் தெருவில் அமைந்துள்ள கருப்பாயூரணி தொடக்க கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ரேசன் கடையில், பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் பல மணி நேரம் பொது மக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெருவில் மாநகராட்சி வார்டு அலுவலகம் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.இங்குள்ள குடும்ப அட்டை பதிவு செய்யும் இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறதாம். இதனால் பொதுமக்கள் ரேசன் பொருட்களை பெற முடியாமல் அவதியடைகின்றனர்.இன்று காலை ஏராளமான மக்கள் குடும்ப அட்டைக்கு ரேசன் பொருள்களை வாங்க கடை முன்பாக குவிந்தனராம்.வரிசையாக சென்றபோது, பதிவு செய்யும் இயந்திரத்தில் சர்வர் பிரச்ணை என, தகவல் வந்தால், வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாறாறத்துடன் செல்ல நேர்ந்து.இது குறித்து மதுரை மாவட்ட வழங்கல் அலுவலரும், மதுரை வடக்கு நகர் வட்ட வழங்கல் அலுவலரும் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.இந்த நிலை தொடர்ந்தால், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என, அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.