
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை திருமங்கலம் போலீசார் மேற்கொண்டனர்.திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கப்பலூர் மேம்பால சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி வினோதினி இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூவும், இனிப்புகளும் வழங்கி பாராட்டினார்.மேலும் வாகன ஓட்டிகளிடம் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அவருடன் போக்குவரத்து காவலர்களும் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.