
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பனையூரில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக எம் எல் ஏ சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பனையூர் ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை எம்எல்ஏ சரவணனிடம் தெரிவித்தனர். மேலும் ஆதி மு க வை நிராகரிக்கின்றோம் என்ற கையெழுத்து பதாகையில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ சரவணன் கூறுகையில்,தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, இன்று முதல் 15 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி களிலும் மக்கள் சபைக்கூட்டங்களை நடத்தி,அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால அவலங்களை குறிப்பாக விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு, லஞ்ச லாவண்யங்களை எடுத்துக் கூறி அதிமுகவை நிராகரிக்கப் பிரச்சாரம் தொடங்கி உள்ளோம்.உதயநிதி ஸ்டாலின் கூறி வருவது போல, நிச்சயமாக அமையப் போகம் திமுக ஆட்சியில் மருத்து வக் கல்வியை இலவசமாக வழங்குவோம், நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.