மாலையாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் திமுகவினர் கிராம சபை கூட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாலையாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அதிமுகவை புறக்கணிப்போம் திமுகவை ஆதரிப்போம் என்று கிராம சபை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசும் எங்களுக்கு கழிப்பறை வசதி ரேஷன் கடை வசதி அங்கன்வாடி மையம் சுகாதார வளாகம் மற்றும் தங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள கோவிலை புதுப்பித்து தருமாறு கோரிக்கை வைத்தனர் இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது ஒவ்வொறு பணிகளை நாங்கள் செய்து கொடுக்க முயற்சி செய்கிறோம் வருகின்ற 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து ஸ்டாலின் முதல்வர் ஆவார் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் யூனியன் சேர்மன் துறை கற்பகராஜ் ,மேல பட்ட கரிசல்குளம் பஞ்சாயத்து உறுப்பினர் ஜெயந்தி , மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.செய்தியாளர் வி காளமேகம்