உசிலம்பட்டி அருகே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர்கள் வாழ்ந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், சுற்றுலாத் தளமாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்பட்ட சமணர்கள் வாழ்ந்த குகை 1996ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.ஆண்டி புடவு என்று அழைக்கப்படும் இந்த சமணர்கள் வாழ்ந்த குகையில் ஏராளமான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.சமணர்கள் மற்றும் அடுத்தடுத்து வந்த வேட்டை சமூகத்தினர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.சமணர்கள் வாழ்ந்தற்கு அடையாளமாக நின்ற நிலையில் பாகுபலி சிற்பமும், மூன்று தீர்த்தர்களின் சிற்பமும் காணப்படுகிறது.பிற்காலத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு சமண சிற்பங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என உருமாற்றம் செய்யப்பட்டு அதை கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.1996 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த சமணர்கள் வாழ்ந்த இடத்தை தொல்லியல்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மதுரைக்கு மேற்கு பகுதியில் உள்ள சமணர்கள் வாழ்ந்த பகுதியில் முக்கியமான பகுதியாக உள்ளது இந்த குகை.சமணர்கள் வாழ்ந்த குகைகளில் தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் சூழலில் இந்த குகையையும் முழுமையான ஆய்வு மேற்கொண்டால் தமிழி எழுத்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.உசிலம்பட்டியின் அருகாமையில் உள்ள இந்த மலையில் சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சமணர்கள் வாழ்ந்த இடத்தை தமிழக அரசும் பாதுகாப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உசிலை சிந்தனியா