திருப்பரங்குன்றம் அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தானாக எரிந்த எலெக்ட்ரிக் பைக்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 29 )கடந்த 28 நாட்களுக்கு முன்பு புதிதாக மின்சார எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். நேற்று இரவு பகல் 2 மணி அளவில் வீட்டில் வாசல் அருகே நிறுத்தி இருந்த போது தானாக வெடித்து தீப்பிடித்து எரிந்தது.இதில் அருகிலுள்ள டூவீலர் பைக் வண்டிகளுக்கும் தீப்பற்றியது .உடனே அருகில் உள்ளவர்கள் அவசரஅவசரமாக வாகனத்தை அப்புறப்படுத்தி உள்ளனர் .இந் நிலையில் கிருஷ்ணவேணிக்கு சொந்தமான எலக்ட்ரிக் முற்றிலும் எரிந்து சேதமானது.இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்து எடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்