மதுரை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த நாசர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின் இந்த வழக்கு விசாரணையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 17 வருடங்கள் தண்டனை காலங்களில் சிறையில் இருந்து வந்த நிலையில் மனநிலை நோயாளிக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தான் அணிந்திருந்த கைலியை கொண்டு சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மத்திய சிறைச்சாலையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்