மதுரை கூடல்புதூரில்27 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது பைக்,பணம் பறிமுதல்.

மதுரை கூடல்புதூரில்27 கிலோ கஞ்சாவுடன் 2 பேரை கைது செய்த போலீசார் பணம் மற்றும் பைக்கைஐயும்பறிமுதல் செய்தனர். மதுரை கூடல்புதூர் பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கூடல்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .கூடல்புதூர்இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை கண்காணித்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை கைதுசெய்தனர் .மதுரை யாகப்பா நகர் தாசில்தார் நகரைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்ற லவ் பெயிலியர் மற்றும் அய்யர்பங்களா இபி காலனியைச் சேர்ந்த வின்சென்ட் செல்வராஜ் என்ற தம்பு 23 என்பவரையும் . செய்து அவர்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் ஆயிரத்தையும் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்