
மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவில்..14/12/2020அன்று மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவத்தில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 35 .இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் .மதுரை சிம்மக்கல்தைக்கால் முதல் தெரு செட்டியார்தோப்பில் முதல் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது தடுமாறி உயர் அழுத்த மின் கம்பத்தில் சாய்ந்து விட்டார் .இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் இவரது உடல் மின்கம்பத்தில் அந்தரமாக தொங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து அவர் உடலை மீட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக இறந்த கொத்தனார் செல்வராஜின் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட உரிமையாளர் செல்லூரைச் சேர்ந்த முத்துலட்சுமி 45 மற்றும் காண்ட்ராக்டர் தைக்கால்தெருவைச் சேர்ந்த வீரபத்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.