Home செய்திகள் திருவாலவாய் நல்லூர் கிராமத்தில் மத்திய அரசின் ஜன்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வேறு கிராமத்துக்கு மாற்ற கோரிக்கை

திருவாலவாய் நல்லூர் கிராமத்தில் மத்திய அரசின் ஜன்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வேறு கிராமத்துக்கு மாற்ற கோரிக்கை

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாய் நல்லூர் கிராமம் உள்ளது தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஜல் ஜீவன் திட்டம் மூலம் குழாய் பதிக்கும் பணி கிராமத்தில் நடைபெற்று வருகிறது இதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இத்திட்டத்தின் அடிப்படையில் வீடு ஒன்றுக்கு குழாய் இணைப்பிற்காக முதல் தவணையாக டெபாசிட் ரூபாய் 6000 கட்டவேண்டும் என்றும் மாதம் 300 அல்லது பயன்படுத்தும் அளவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு கிராம அடிப்படை வசதி தேவைக்கே போதுமான தண்ணீர் வசதி உள்ளது எங்களால் 6 ஆயிரம் ரூபாயும் மாதத்300 தவணைத் தொகையும் கட்டுவது சிரமம் எனவே இத்திட்டத்தை தண்ணீர் இல்லாத வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் எங்கள் கிராமத்திற்கு இந்த திட்டம் தேவை இல்லை என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஏற்கனவே பதித்த குழாய்களுக்கு அருகில் புதியதாக பைப் குழாய்கள் பதிக்க பள்ளம் தூண்டுவதால் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் இது சம்பந்தமாக வாடிப்பட்டி யூனியன் கமிஷனிடம் புகார் தெரிக்க செல்வதாக கூறி சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!