Home செய்திகள் கைலாசநாதர் கோவில் அருகே தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது.

கைலாசநாதர் கோவில் அருகே தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாவா தர்கா உள்ளது .இங்கு 1967 ஆம் ஆண்டு வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.அதன் பின் இந்து முஸ்லிம் என இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு காரனமாக கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது.இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றம் வரை சென்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி பெற்றனர்.ஆனால் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுகின்றனர்.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினர்.இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நபர்கள் குறித்து தேடி வந்தனர்.இன்னிலையில் வில்லாபுரத்தைப் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கீரை துறையை சேர்ந்த அரசு பாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர் இவர்கள் இருவரும் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களின் மீது 5 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்போலீஸாரால் மலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com