சாலையில் விட்டு சென்ற முதியவர் மீட்டர் காவல்துறையினர் காப்பகத்தில் சேர்த்தனர் ..

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடக்குளம் பெரியார் நகர் கிழக்கு தெரு அருகில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடமாட இயலாமல் முள் இரும்பு மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதியில் படுக்கையாக கிடந்தார்,இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மதுரை எஸ் எஸ் காலனி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ் எஸ் காலனி போலீசார் விசாரித்ததில் அவர் பெயர் முத்துக்கிருஷ்ணன் எனவும் அவர் சற்று மனநலம் பாதித்தவர் எனவும் தெரியவந்தது,அவர் மீட்கப்பட்டு திருநகரில் உள்ள. சுரபி. அறக்கட்டளையால் நடத்தப்படும் தாய்மடி இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்