பிரளய நாயகி அம்மன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரளய நாதர் உடனுறை பிரளய நாயகி அம்மன் ஆலயத்தில் 2020 ஆம் ஆண்டில் நிருதி சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் உள்ளிட்டோர் பால் ,தயிர், வெண்ணெய், நெய் உட்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்தொடர்ந்து அம்மன் உடன் உரையுடன் வாகனத்தில் கோவிலுக்குள் கிரிவலம் வந்தனர். பக்தர்கள் நமச்சிவாயம் நமச்சிவாயம் என்று முழங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் எம் .வி.எம் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி பள்ளி தாளாளர் எம். மருதுபாண்டியன், உள்ளிட்டோர் செய்திருந்தனர் திருக்கோவில் நிர்வாக அதிகாரி இளஞ்செழியன், ஆலய பணியாளர்கள் பூபதி ,கவிதா, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். இதேபோல திருவேடகம் ஏடகநாதர் சமேத ஏலவார்குழலி அம்மன் கோவிலிலும் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்