Home செய்திகள் டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நிகழும் அதிசயம் – எரிகற்கள் மழையாய் பொழியும்.

டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நிகழும் அதிசயம் – எரிகற்கள் மழையாய் பொழியும்.

by mohan

உலகம் முழுவதிலும் வருகின்ற டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.உலகின் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கும் அதிசயங்களை விஞ்ஞானிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். எந்த நாளில் எப்படிப்பட்ட அதிசயம் நிகழும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியவருகிறது. அதனால் அந்த அதிசயம் ஏற்படும் நாளில் மக்கள் அதனை தவறவிடாமல் கண்டு களிக்கிறார்கள். அதன்படி வால்நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும் தூசி மண்டலத்தின் வழியாக செல்வதால் டிசம்பர் 13 மற்றும் 17ம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 150 எரி நட்சத்திரங்கள் விழும் என்றும், உலகம் முழுவதும் இந்த காட்சி தெரியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்புறங்களில் இந்த காட்சியை ஓரளவு தான் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Source By: Seithisolai

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!