Home செய்திகள் மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

by mohan

மத்திய அரசே நீதித்துறையை வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்து/.பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வாசல் சின்னக்கடை வீதி பகுதியில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் கமால் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.கட்சியின் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கூட்டமைப்பினர் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில், சிறப்புரை நிகழ்த்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்ட தலைவர் அப்துல்லா ஸாஆதிஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இறுதியாக நன்றியுரை மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் நிகழ்த்தினார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாலையில் திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாப் பகுதியில் மத்தியில் தொகுதி தலைவர் ஆரிப் கான் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் அஹமது கண்டன உரை நிகழ்த்தினார்.கட்சியின் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் உலமாக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் அநீதிக்கு எதிராக மத்திய தொகுதி செயலாளர் அபுதாஹீர் தெற்கு தொகுதி தலைவர் தாஜுதீன் வடக்கு தொகுதி செயலாளர் பிலால் தீன் ஆகியோர் கண்டன கோஷங்கள் முழங்கினார்கள்…இந்நிலையில், டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!