Home செய்திகள் இராமநாதபுரம் சந்தை திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் சந்தை திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.

by mohan

1992ம் ஆண்டு டிசம்பர் 06 அன்று ஒட்டுமொத்த உலகமே விழித்திருந்த நேரத்தில், அயோத்தியில் முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜித் சங்கபரிவார சக்திகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டும் அல்ல, தேசத்தின் இறையாண்மையும், ஜனநாயகமும், வழிபாட்டு உரிமையும், மதசார்பின்மையும், சிறுபான்மையினரின் நலன்களும், பாதுகாப்பும் சேர்ந்தே அப்போது தகர்க்கப்பட்டது. எனினும் இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக நிச்சயம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 நவம்பர் 9 அன்று, நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கடந்த செப்.30 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இந்திய நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்தன.

இதனால் உலக நாடுகளுக்கு முன்னாலும், சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலும் இந்திய நீதித்துறை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.இந்நிலையில், டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.அதனடிப்படையில் இராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.இராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவர் முகமது சுலைமான், மாவட்ட செயலாளரும் திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவர் Dr.ஜமீலுன் நிஷா, Sapi மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் கான், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சாதிக்குள் அமீன், மேற்கு தொகுதி துணைத்தலைவர்கள் நவாஸ்கான், நூருல் ஜமான், கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஸா, துணைத் தலைவர் அப்துல்லா, செயலாளர் அன்வர், இராமநாதபுரம் நகர் தலைவர் நஜ்முதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் வரவேற்புரை மற்றும் தொகுப்புரையை SDTU தொழிற்சங்கம்  மாவட்ட செயலாளர் பீர்முஹைதீன், மாவட்ட தலைவர் முஸ்தாக்அஹமது,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊடகபிரிவு கீழைஅஸ்ரப்,  முஹம்மதுபாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!