திருமங்கலத்தில் போக்சோ சட்டத்தின் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்மதுரை அருகே பெருங்குடி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்த சிறுமி (வயது 17). இவருக்கும் பெருங்குடியில் உள்ள சக்திவேல் என்பவருக்கும் சிறுமியின் தாயார் மீனாட்சி கடந்த மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் ஊர் நல அலுவலர் முத்து லட்சுமி என்பவர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமியிடம் விசாரித்ததில் சக்திவேல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்தது.இதையடுத்து சக்திவேலையும் திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மீனாட்சியையும் போக்சோ சட்டத்தின்கீழ் திருமங்கலம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்