
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நிர்வா புயல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அப்புயல் கடந்த நிலையில் மற்றொரு புயல் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலத்தில் இன்று (02.12.2020) காலை 8 மணிக்கு நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி தலைமையிலும் கீழக்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
பேரிடரின் போது மீட்புக்குழுவினர் உடனடியாக மழை பாதுகாப்பு கவசத்தோடும், கையில் டார்ச் லைட்டோடும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து செல்ல வேண்டுமென்றும் அங்கே கொடுக்கப்படும் வழிகாட்டல் முறைப்படி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மூர் ஜெய்னுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மீட்புக்குழுவினரை ஒருங்கிணைக்கும் பணியினை மூர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஹஸனுதீன் மற்றும் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் மேற்கொண்டனர்.
You must be logged in to post a comment.