மலையடிப்பட்டி பகுதியில் தாயுடன் கள்ளத் தொடர்பு இருந்தால் அவரை கத்தியால் குத்தி கொன்ற மகன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு மலையடிபட்டி MGR பின்புறம் பகுதியில் வசித்து ராமர் வயது 56 இவர் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணிடம் கள்ள தொடர்பு வைத்துள்ளார் இது இருவர் வீட்டார்க்கு இடையே அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்துள்ளதுஇந்த நிலையில் மாரியம்மாள் மகன் மாடசாமி மதன் வயது 25 நேற்று இரவு இராமரிடம் தாயுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள் அதில் கைகலப்பு ஏற்பட்டதில் மாடசாமி மதன் ராமரை கத்தியால் குத்தியதில் ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார்இக் கொலை சம்பந்தமாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலறிந்து வந்த இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாங்கசங்கர் மற்றும் தெற்கு காவல் நிலைய குற்றபிரிவு ஆய்வாளர் கணேஷ் தாஸ் கொலை சம்பவத்தை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாடசாமி மதனை கைது செய்தனர்உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் தாயுடன் ஏற்பட்ட கள்ளதொடர்பு தான் கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம்