
வங்கக்கடலில் உருவான புரெவி (Burevi) புயல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு 530 கி.மீ., தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால், அடுத்த சில மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. புயலின் தாக்கத்தை மீனவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்டதையடுத்து படகுகள் அனைத்தும் கரையேற்றப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன
You must be logged in to post a comment.