மதுரையில் மொத்த வியாபார கடையில் திருடிய ஊழியர் கைது

மதுரை … மொத்த வியாபார கடையில் சிகரெட் பண்டல்கள் திருடிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.மதுரை கோமதிபுரம் ஆவின் நகரைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா .இவர் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் பீடி சிகரட் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இங்கு செல்லூரை சேர்ந்த சிவா என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடையில் சிகரெட் பண்டல்களை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 3 ண்டல்களை திருடியபோது மாட்டிக்கொண்டார். இந்த திருட்டு தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் சிவாவை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்