
இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட 14 பஞ்சாயத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் குடும்பத்திற்க்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 2.25 லட்சம் நிதி உதவிவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள 14 பஞ்சாயத்துக்கு உட்பட்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ,உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்குடியவர்கள் குடும்பத்திற்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் MS ராஜவர்மன் தனது சொந்த பணத்தில் இருந்து 45 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ,ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் முருகபூபதி ,மேல ராஜ குலராமன் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், ஒன்றிய கழக பொருளாளர் சுப்பையா துறை , இராஜபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.