Home செய்திகள் இராஜபாளையத்தில் மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

இராஜபாளையத்தில் மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்து ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதில் பெரிய மந்தை தெரு மற்றும் மாடசாமி கோவில் தெரு அய்யனார் கோவில் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் அதிகப்படியான மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழை தாக்கம் குறையாமல் தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக இராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது .

மேலும் இராஜபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி திட்ட பணிகளுக்கு குழாய் அமைப்பதற்காக சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு உள்ளதால் மழையின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் சரி செய்யாமல் மழை நீர் தேங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை சம்பவ இடத்திற்கு வந்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே மாதிரி இன்னும் இரண்டு நாட்கள் மழை பெய்தால் இராஜபாளையம் நகரில் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும்.செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com