கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டபள்ளங்கல் சரிவர மூடாததால் பேருந்து பள்ளத்தில் பதிந்து போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது சில இடங்களில் பணிகள் நிறைவடைந்து சாலைகள் போடப்பட்டுள்ளன சாலைகள் போடப்பட்ட பகுதிகள் சரிவர மூடாததால் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியதால் போடப்பட்ட சாலைகள் பள்ளம் ஏற்பட்டு அந்த வழியில் சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டு இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம்மின்றி தப்பினர் மேலும் இந்த பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பொதுவாகவே இராஜபாளையம் பகுதி முழுவதும் சாலைகள் பள்ள மேடுகலாக காட்சியளிக்கும் இந்த நிலையில் இதுபோன்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்