மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டு புகார் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தாண்டி கிராமத்தை சேர்ந்தமுத்துப்பாண்டி என்பவர்தீபாவளிக்காக பட்டாசு வாங்க சென்றபோது நடு ரோட்டில் நின்றுகொண்டிருந்தஅதே பகுதியை சேர்ந்தநான்கு நபர்களை சாலையை விட்டு வரும்படி கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முத்து பாண்டியின் பெரியப்பா முத்து விஜயநாதனைசரமாரியாக தாக்கியுள்ளனர்இதனால் படுகாயமடைந்த முத்து விஜயநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று.சிகிச்சைப் பலனின்றி இறந்தார்இதனால் ஆத்திரமடைந்த இவரது உறவினர்கள் ஆகிய நான்கு நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் அவர்களுக்கு தண்டனை வழங்குமாறும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் 50க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாகனத்தை வழிமறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்களிடம் மனு அளித்தனர்மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னரே கலைந்து சென்றனர்இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி நேற்று காலை திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம்