Home செய்திகள் மதுரை அவனியாபுரம் அருகே ஒரு வாரமாக பால் வடியும் வேப்பமரம் – சுற்றுப்புற பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு எடுத்து செல்கின்றனர்*

மதுரை அவனியாபுரம் அருகே ஒரு வாரமாக பால் வடியும் வேப்பமரம் – சுற்றுப்புற பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு எடுத்து செல்கின்றனர்*

by mohan

சுற்றுப்புற சூழலுக்கு இன்றியமையாதது மரங்கள்தான். அந்த வகையில் அனைத்து வகை மரங்களிலும் மூலிகை, மருத்துவ குணம் கொண்டது.பொதுவாகவே அனைத்து வகை மரங்களிலிருந்து பால் கசிவது வழக்கம், ஆனால் மரங்களிலிருந்து பால் கசிவது அரிதான ஒன்று.அந்த வகையில் அரசமரம், வேப்பமரங்களிலிருந்து கசியும் பால் பூச்சிக்கடி மற்றும் தீராத நோய்களை தீர்க்க கூடிய மருந்தாக திகழகிறது.அந்தவகையில் வேப்பமரத்திலிருந்து வரக்கூடிய பால் பாம்புக்கடி, தேள், வண்டு உள்ளிட் விஷ பூச்சிக்கடிக்கு மருந்தாக பயன்படுகிறது,ஆனால் வேப்பமரத்திலிருந்து வரக்கூடிய பால் மிகவும் அபூர்வம். வேப்ப மரத்திலிருந்து அடிக்கடி பால் கசிவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.அந்தவகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் வளர்ந்துள்ள வேப்பமரத்திலிருந்து கடந்த ஒருவாரமாக பால் வடிந்து கொண்டிருக்கிறது.இதைக்கண்ட சுற்றுப்புற மக்கள் ஆர்வத்துடன் கண்டு பார்த்து விட்டு கசியும் பாலை வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.மேலும் இந்த வேப்பமரத்து பால் பாம்புகடி தேள் உள்ளிட்ட விஷ பூச்சி கடிக்கும் தீராத நோய்களை தீர்த்து வைக்ககூடிய மருந்தாகவும் பயன்படுகிறது.

செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com