
கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மாவட்டம் அறையில் இயங்கிவந்த ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு நான்கு மாதங்களாக திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி துணைக்கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்ததுஇந்நிலையில் தற்போது பெய்யும் வடகிழக்குமழை மற்றும் அரசின் கொரானா நோய் தொற்று விதிமுறைகள் தளர்வு காரணமாகவும்மதுரை மாவட்ட ஆட்சியர் காய்கறி வணிக வளாகம் மீண்டும் இன்று முதல் பரவையில் செயல்பட துவங்கியுள்ளதுஇந்த காய்கறி சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.மேலும் மாவட்ட ஆட்சியர் தேடும்படி சில்லரை வணிகம் மற்றும் வியாபாரம் மார்க்கெட்டுக்கு அருகில் கிழக்கு பகுதியில் உள்ள தற்காலிக இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அந்த அடிப்படையில் பொதுமக்கள் தங்களது வீட்டு தேவைகளுக்கும் விசேஷங்களுக்கும் உணவகங்களுக்கு காய்கறிகளை சில்லரையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனமேலும் காய்கறி சந்தைக்கு வரும் வியாபாரிகளும் பொதுமக்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைபின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.