இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் குறித்து வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றதுஇந்த விழாவை இராஜபாளையம் நகர செயலாளர் மாரியப்பன் ஏற்பாடு செய்திருந்தார் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்இதில் இராஜபாளையத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தியாகியான அலக்ராஜா, பங்காரு ராஜா, திருப்பதி ராஜா ,பொன்னுசாமி மாதவன் ,பி .எம் ராமசாமி, வைரவநாதன், திருஞானம் ,ரங்கசாமி ,உள்ளிட்ட பலரது முக்கிய வரலாறு அடங்கிய நூலாக வெளியிட்டனர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்