இராஜபாளையம் அருகே சுந்தராஜபுரம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2பேர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுப் பகுதிகளில் மணல் திருடுவதாக சேத்தூர் ஊரக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலையடுத்து சேத்துார் ஊரக போலீஸார் சுந்தரராஜபுரம் வாட்டர் டேங்க் பகுதியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது. விசாரணையில் சோலைசேரியை சேர்ந்த லிங்கம் (35), மற்றும் தலை மலையான் (32) என தெரியவந்தது இவர்களிடம் இருந்து மணல் மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றி இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்