Home செய்திகள் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பாதுகாப்புக்கான காவல்துறையின் “காவலன் எஸ்.ஓ.எஸ்” அழைப்பேசி செயலி (மொபைல் ஆப்) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பெண்கள் பாதுகாப்புக்கான காவல்துறையின் “காவலன் எஸ்.ஓ.எஸ்” அழைப்பேசி செயலி (மொபைல் ஆப்) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

by mohan

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் லில்லிகிரேஸ் கலந்துகொண்டு மொபைல் ஆப் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.மேலும் இந்த ஆப் நமது மொபைல் போனில் இருந்தால் ஆபத்து மற்றும் அவசர உதவிக்கு எளிய முறையில் காவல்துறையை தொடர்புகொள்ள முடியும் என்றும் நாம் இருக்கும் இடத்தை எளிதாக அவர்கள் கண்டு பிடிக்க முடியும் என்பதையும் விளக்கினார்.பின்னர் காவலன் எஸ்ஓஎஸ் செயலி பதிவிறக்கம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில் மக்களின் நண்பனாக காவல்துறையையும் பெண்களின் நண்பனாக காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியையும் பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் காவல்துறையினர், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!