மதுரைஅரசு மருத்துவமனையில் மெக்கானிக் குதித்து தற்கொலை

மதுரை பி.பி. குளத்தை சேர்ந்தவர் மனோகரன் (53). இவர் கரோனா  தொற்று அறிகுறி காரணமாக அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை மதிச்சியம் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்துகொண்ட மனோகரனுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மையர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார்.மனோகரன் இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் இருந்தால் அது தொடர்பாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கடன்தொல்லை இருந்துள்ளது. நேற்று இரவு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தது தொடர்பாக மனைவி கூறியுள்ளார். இரவு முழுவதும் தூங்காமல் வார்டில் சுற்றி திரிந்ததாக செவிலியர்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்