செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா! தலைவர்கள் வாழ்த்து.

தி.மலை மாவட்டம் செங்கம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிக்கண்ணு மகன் ரங்கநாதன்-தேவி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதிமுக பிரமுகர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் அனைவரையும் வரவேற்றார். திருமண விழா திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் முன்னிலை வகித்தார். தி.மலை நகர செயலாளர் செல்வம், மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், நகர செயலாளர் ஆனந்தன் நகர அம்மா பேரவை செயலாளர் குமார், வழக்கறிஞர், தினகரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு, முன்னாள் நகர செயலாளர் கே.கே.மணி , இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலைமணி, புதுப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன் மற்றும் பல்வேறு கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்.